காற்று வெளியிடை – விமர்சனம்

0
58
Kaatru Veliyidaiஇரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு ரொமான்ஸ் கதையுடன் திரும்பியிருக்கும் மணி ரத்னம், காற்று வெளியிடை கதைக்களத்தை கார்க்கில் போருக்கு நடுவே வைத்திருக்கிறார்.
ராணுவத்தில் விமானப்படை பைலட்டாக பணிபுரியும் வருணும் (கார்த்தி), அவரது கூலிங் கிளாசும், டாக்டர் லீலாவை (அதிதி ராவ்) துரத்தி துரத்தி காதலிக்கின்றனர். முதல் பாதியில் வழக்கமான மணி ரத்னம் ஹீரோவைப் போல், சுட்டித் தனமான ரோமியோவாக வரும் கார்த்தி, தனது விமான சாகசங்களை வைத்து ஹீரோயினை மயக்கி காதலில் விழ வைக்கிறார்.
பாரதி கவிதை பாடும் அதே நேரத்தில், “இதைப்பத்தியெல்லாம் உனக்கு என்ன தெரியும். வாய மூடு” என சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் எல்லோர் முன்னேயும் லீலாவை அசிங்கப்படுத்துகிறார். என்ன தான் அசிங்கப்படுத்தினாலும், ஒரு நாளுக்குள் சமாதானமாகி, அடுத்த சண்டை போட ரெடியாகி விடுகிறார் லீலா. ஹீரோயினை சமாதானப்படுத்த, கார் மேல் ஏறி நிற்பது, அவரது அப்பாவை பேர் சொல்லி கூப்பிடுவது, என கார்த்தி செய்யும் சேஷ்டைகள் எல்லாம் மணி ரத்னத்தின் பழைய படங்களை நியாபகப் படுத்துகிறது.
எத்தனை முறை சண்டை போட்டாலும் திருந்தாத கார்த்தி, பாகிஸ்தான் ராணுவத்தில் சிக்கி, அங்கு அடிபட்டு வேதனை பட்டு, காதலின் அருமையை அறிந்து திருந்துவது தான் கதை. இரண்டாம் பாதி தான் படத்தின் மிகப்பெரிய மைனஸ். சண்டைகளும், சமாதானப்படுத்தும் வசனங்களும் ரிப்பீட்டாகி கொட்டாவி விட வைக்கின்றன.
சீரியஸான கதாபாத்திரத்தில் வரும் ஆர்.ஜே.பாலாஜியோட நடிப்பெல்லாம் ஓகே, ஆனா சீன்கள் ரொம்ப கம்மி. அதிதியின் நண்பராக வரும் ருக்மணி, டெல்லி கணேஷ் என மற்ற கதாபாத்திரங்கள் நன்றாகவே நடித்துள்ளார்கள். படத்தின் மிகப்பெரிய பலம் கேமராவும் இசையும். லொகேஷன்களை காட்டி அவ்வப்போது திசை திருப்பினாலும், வீக்கான கதையும், வசனங்களும் டல்லடிக்கின்றன.
Share