24 – திரை விமர்சனம்

0
741

24அஞ்சான், மாஸ் படங்கள் எதிர்பார்த்த பெரிய வெற்றியை தராததால் சூர்யாவுக்கு இந்த 24 படம் மிக முக்கியம். ரசிகர்களின் எதிர்ப்பார்பை நிறைவேற்றும் பொருப்புடன் இப்படம்  ஒரு வெற்றிபடமாக வெளிவந்துள்ளது பாராட்டத்தக்கது. முதன்முறையாக மூன்று மாறுபட்ட கதாபாத்திரத்தில் சூர்யா இப்படத்தில் ந‌டித்துள்ளார்.

சேதுராமன் என்ற விஞ்ஞானி தனது ஆராய்ச்சியில் Project 24 என்ற வாட்சை கண்டுபிடிக்கிறார்.. அவரது அண்னணான ஆத்ரேயா எப்படியாவது அந்த வாட்சை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தனது தம்பியையும் ,அவருடய மனைவியையும் கொலை செய்கிறார்.

ஒரு விபத்தில் தம்பியின் குழந்தையையும், அவர் அடைய நினைத்த project 24 வாட்சையையும் தவறவிட்டு கோமாவுக்கு செல்கிறார் ஆத்ரேயா.

பின்னர்,26 ஆண்டுகள் கழித்து கதை நகர்கிறது. விஞ்ஞானி மகனான மணி வாட்ச் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.. அவர் இடம்தான் அவரது அப்பா கண்டுபிடித்த 24 என்ற வாட்ச் அட‌ங்கிய பெட்டி இருக்கிறது..

இந்நிலையில் 26 வருடம் கழித்து கோமாவிலிருந்து வெளிவ‌ரும் ஆத்ரேயா அந்த வாட்சை அடைந்தாரா இல்லையா என்பதே கதை..

சூர்யா ஆத்ரேயா, சேதுராமன்,மணி என்ற மூன்று கதாபாத்திரங்களிலும் தனது நடிப்பை கச்சிதமாக வழங்கியுள்ளார்.. குறிப்பாக ஆத்ரேயா கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு மிரட்டல்..

நித்யாமேனன் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தனது நடிப்பால் ரசிகர்கள் மனதில் அழகாக பதிந்திருக்கிறார்.

சமந்தா தனது அழகால் ரசிகர்களை கவர்ந்திழுக்கிறார்..

ஒரு கலகலப்பான அம்மாவாகவும் சரி, சூர்யா தன்னுடைய மகன் இல்லை என்பதை சொல்லும் போதும் உணர்வு பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சரண்யா பொன்வண்ணன்.

திருவின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாக படமாகியிருக்கிறது.

ஏ.ஆர்.ரகுமான் சயின்ஸ் பிக்சன் படத்திற்கு ஏற்ற இசையயை வழங்கியுள்ளார்.

இயக்குனர் விக்ரம் குமார் ஒரு சயின்ஸ் பிக்சன் கதையை ரசிகர்களுக்கு எந்தவொரு குழப்பமும் ஏற்படாமல் மிகவும் தெளிவாக எடுத்திருக்கிறார்..

இதன் விடீயோ பதிவை பார்க்க   https://youtu.be/KOIx6nUh7pI

Share