விஜய் மிஸ் செய்தது அஜித்துக்கு கிடைக்குமா?

0
4194

 

avபரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘விஜய் 60’ படத்திற்கு ‘எங்க வீட்டு பிள்ளை’ என்று டைட்டில் வைக்க படக்குழுவினர் விரும்பினர், பின்னர் எம்.ஜி.ஆர். ரசிகர்களிடம் இருந்து கிளம்பிய எதிர்ப்பு காரணமாக தற்போது பின்வாங்கிவிட்டனர். இந்த படத்திற்கு ‘எங்க வீட்டு பிள்ளை’ டைட்டில் இல்லை என்பதை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டனர்.

இந்நிலையில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 57வது படத்திற்கு ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்ற டைட்டிலை வைக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தலைப்புக்கு இதுவரை எதிர்ப்பு வரவில்லை என்பதால் இந்த படத்திற்கு ‘உலகம் சுற்றும் வாலிபன்’ டைட்டில் வைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

எம்.ஜி.ஆர் பட டைட்டிலை விஜய் மிஸ் செய்த நிலையில் அஜித்துக்கு எம்.ஜி.ஆர். பட டைட்டில் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..

Share