புது ட்ரெண்ட்டில் த்ரிஷாவும் நயன்தாராவும்

0
182

trish nayan

பாலிவுட்டில் ‘மார்டானி’ ‘கஹானி’ போன்ற படங்கள் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெa படங்கள் வருவதும் சகஜாமாகிவிட்டது. தமிழில் இப்போது அதே ட்ரேண்ட் தொடங்கியிருக்கிறது.  தமிழ் சினிமாவில் கடந்து பத்து வருடங்களாக  முன்னியில் இருக்கும் கதாநாயகிகள் இருவர த்ரிஷா மற்றும் நயன்தாரா இருவரும் அந்த புதிய ட்ரெண்ட்டை துவக்கி வைத்தவர்கள் என்று சொல்லலாம். சமீபத்தில் நயன் தாரா நடித்து வெளியான மாயா திரைப்படம் பெரும் வெற்றி பெற்றுது இடை அடுத்து தற்போது தமிழ் மற்றும் தெலுங்கி பெரும் பொருட்செலவில் தயாராகும் நாயகி திரைப்படத்தில் த்ரிஷா லீட் ரோலில் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் திரைக்கு வர தயாராகிறது.

இதை தவிர இயக்குனர் சற்குணம் தயாராப்பில் நயன்தாரா நடிக்கும் ‘டோரா’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியே இல்லை. அதேபோல் த்ரிஷா நடித்து வரும் ’மோகினி’ படத்திலும் நாயகன் இல்லை. ஹீரோயின் என்றாலே காதல் செய்வதற்கும் டுயட் பாடுவதற்கும் மட்டுமே என்ற நிலையிலிருந்து தமிழ் சினிமா மெல்ல மீண்டு வருவது வரவேற்கத்தக்கதே. இதற்கு முன்னோடிகளாக இருக்கும் த்ரிஷா மற்றும் நயன்தாராவை மனதாரா பாராட்டலாம்.

Share