தேசிய விருதை விட பெரிய விருதை பெற்றுவிட்டேன் – விக்ரம்

0
4839

 

vik

63வது தேசிய விருது நேற்று அறிவிக்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான விருது ‘ஐ’ படத்தில் நடித்த விக்ரமுக்கு கிடைக்கும் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் அவருக்கு அந்த விருது கிடைக்கவில்லை. ‘பிக்கு’ படத்தில் நடித்த அமிதாப்புக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.

இந்நிலையில் பி.சி.ஸ்ரீராம் உள்பட பலர் விக்ரமுக்கு தேசிய விருது கிடைக்காதது குறித்து தங்கள் ஆதங்கத்தை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் விக்ரம் இதுகுறித்து கூறும்போது, “நான் நடித்த ஒருசில கஷ்டமான கேரக்டர்களுக்கு நான் என்றுமே விருதுகளை எதிர்பார்ப்பது கிடையாது. ஏனெனில் எனது நடிப்புக்கு எண்ணிலடங்கா ரசிகர்கள் எனக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். அந்த பாராட்டுக்களை விட ஒரு அறையில் உட்கார்ந்து நான்கு பேர்கள் தரும் பாராட்டை பெரியதாக கருதவில்லை”

கடந்த 2003ஆம் ஆண்டு பாலாவின் ‘பிதாமகன்’ படத்தில் நடித்ததற்காக ஏற்கனவே விக்ரம் தேசிய விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share