சென்னையில் கபாலி படைத்த வசூல் சாதனை?

0
641

kbரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படம் கடந்த மாதம் 22ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்தது.

இந்நிலையில் கபாலி படம் 25வது நாள் என்ற மைல்கல்லை எட்டியுள்ள நிலையில் இந்த படத்தின் சென்னை வசூல் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

சென்னையில் ‘கபாலி’ திரைப்படம் கடந்த 22ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை மொத்தம் ரூ.11 கோடி வசூலாகியுள்ளது.

சென்னையில் இதுவரை வெளியான திரைப்படங்களில் ‘கபாலி’தான் அதிக வசூல் சாதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது..

Share