கபாலி கவுண்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்

0
226

 

kabali 1

’கபாலி’ இந்த சொல் வெறும் பெயராக இருந்தது போய் இன்று தமிழ் நாட்டின் ஏன் இந்தியாவின் இல்லை இல்லை உலக திரை ரசிகர்களின் மந்திர சொல்லாக மாறி ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. டீஸர் ரிலீசான பின் ‘நெருப்புடா’, ‘மகிழ்ச்சி’ ‘நான் வந்துட்டேன்னு சொல்லு’ என்று எல்லாமே பச் சொற்களாக மாறிவிட்டன. கபாலி ரிலீஸ்க்கு ரெடி. இன்னும் ஒரே வாரம், அடுத்த வாரம் இதே நாள் கபாலி திரையரங்கை அலங்கரித்திருப்பார்.

இதற்குமுன் கிடைத்த தகவல்படி கபாலி உலகளவில் 5000 திரையரங்குகளில் வெளியிடப்போவதாக தகவல் இருந்தது. தற்போது தமிழ்நாட்டில் எந்தனை திரையரங்கில் வரவிருக்கிறது என்ற தகவலும் கிடைத்துள்ளது. சுமார் 750 திரையரங்குகளில் வெளிவரவிருக்கிறது. அதிலும் குறிப்பாக செங்கல்பட்டு ஏரியாவில் அதிகபட்சமாக 150 திரையரங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அது தவிர சென்னையில் 55 , வட ஆற்காடு, தென் ஆற்காடு மாவட்டத்தில் தலா 75, சேலம், கோயம்பத்தூரில் தலா 100 திருநெல்வேலி கன்யாகுமரியில் 50 என எங்குங்கு காணினும் கபாலி மயமாகப்போகிறது அடுத்தவாரம்.

ரஜினி தன்னை முழுக்க முழுக்க இளைஞர்களிடம் ஒப்படைத்து புது டீமோடு இந்த படம் உருவாகி இருப்பதால், ரஜினி படமாக மட்டும் இல்லாமல் நல்ல கதையாகவும் நல்ல படமாகவும் இது இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பே ரசிகர்களிடம் மேலோங்கி இருக்கிறது. அதுவே இந்த எதிர்ப்பிற்கு காரணம்.

கபாலி கவுண்ட்டோன் ஸ்டார்ஸ்… இன்னும் ஆறே நாட்கள்…. 5…4…3…2…1..

Share