இது நம்ம ஆளு  – திரை விமர்சனம்

0
343

 

inar

சிம்புவிற்கு நயன் தாராவுடன் நிச்சயதார்த்தம் நடக்கின்றது.
திருமணத்திற்கு 6 மாதம் இருக்கும் நிலையில் இருவரும் போனில் விடிய விடிய பேச ஆரம்பிக்கிறார்கள்..

ஓரு கட்டத்தில் சிம்பு நயன்தாராவிடம் அவரது பிளாஷ்பேக்கை கூறுகிறார்.ஆண்ட்ரியாவுடன் ஒரு அழகிய காதல், எப்போதும் போல் ஆரம்பத்தில் சந்தோஷமாக செல்ல பின் ஒரு சண்டையில் பிரேக் அப்.

இதனால் சிம்பு மற்றும் நயன்தாராவின் திருமணத்திற்கு சிக்கல் ஏற்படுகிறது..அதை தொடர்ந்து சிம்பு யாரை கரம் பிடித்தார் எனபதை செம்ம கலகலப்பாக கூறியுள்ளார் பாண்டிராஜ்

சிம்பு சிவா கதாபாத்திரத்தில் ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கும் இளைஞராக வருகிறார்.. தனக்கே உரிய துறுதுறு நடிப்பால் எல்லோருக்கும் பிடித்தது போல் கலக்கியுள்ளார். நயன்தாராவை காதலிக்கும் இடத்தில் ஓ இப்படி தான் சிம்பு லவ் பண்ணாரா என்று நமக்கே எண்ண தோன்றுகின்றது.சிம்புவின் முகபாவனைகளூம், வசன உச்சரிப்பும் மிக அருமை..

மைலா கதாபாத்திரத்திற்கு நயன்தாரா பொருத்தமான தேர்வு.. படம் முழூவதும் மிக அழகாக இருக்கிறார்.. அவரது ரியல் வாழ்க்கை சம்மந்தப்பட்ட பல காட்சிகள் படத்தில் இருக்கின்றன..சிம்புவிற்கும் நயன்தாராவிற்கும் இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது..

ஆண்ட்ரியா அழகாகவும் இளமையாகவும் இருக்கிறார். நடிப்பிலும் குறைவைக்கவில்லை.

சூரி சிம்புவை பல இடங்களில் கவுண்டர் கொடுக்கும் கதாபாத்திரம், அவர் பேசும் போன் டாக்கிற்கு இவர் கொடுக்கும் கவுண்டர் வசனங்களுக்கு தியேட்டரில் விசில் சத்தம் பறக்கின்றது. சிம்புவை அவர் கலாய்ப்பதும் பதிலுக்கு மொக்கை வாங்குவதும் ரசனையான கலாட்டா.

சந்தானம் வரும் நான்கு காட்சிகளும் நகைச்சுவைக்கு கியாரண்டி.

குறளரசனின் இசையில் பாடல்கள் காதுக்கு இனிமையாக இருக்கின்றன,பின்னணி இசையிலும் கலக்கியுள்ளார்

பாலசுப்ரமணியனின் ஒளிப்பதிவு கண்களுக்கு செம்ம விருந்து..

மொத்தத்தில் இது நம்ம ஆளு காதலர்களுக்கு இது நம்ம படம்.

Share