இதுவரை நடிக்காத ரோலில் தனுஷ் : கொடி- ரகசியம்

0
197

danush newதனுஷ் தற்போது நடித்து முடித்துள்ள படம் கொடி. இது துரைசெந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள அரசியல் கலந்த படம். இதில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது ஏற்கனவே தெரிந்த செய்தி. ஆனால் இப்போது புதிதாக கிடைத்துள்ள தகவல்படி தனுஷ் அப்பா மகன் ரோலில் நடிக்கிறாராம். வயதான கெட்டப்பில் அப்பா ரோலில் தனுஷ் இதுவரை நடித்ததில்லை. மேலும் மகன் வேஷத்திற்கும் அப்பா வேஷத்திற்கும் நிறைய வித்தியாசம் காட்டி நடித்துள்ளாராம் தனுஷ். மேலும் இதில் ஒரு முக்கியமான கேரட்டரில் இயக்குனரும், விஜய்யின் தந்ந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்துள்ளார். இருவருக்குமான காட்சிகளில் நிகழ்கால அரசியலை விமர்சிப்பதுபோல் அழுத்தமான காட்சிகள் இருக்கிறதாம். கொடி கொடிகட்டி பறக்குமா என்பதை திரையில் பார்ப்போம்.

Share